இந்தியா

இன்று குடியரசுத்தலைவர் வேட்பாளர்... அன்று சிம்லாவில் ஓய்வு மாளிகைக்குள் செல்ல அனுமதி மறுப்பு

செய்திப்பிரிவு

பிஹார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் சற்றும் எதிர்பாராத விதமாக பாஜக-வின் குடியரசு வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார், இதனையடுத்து இவரைப்பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் கடந்த மே மாதம் 28-ம் தேதி சிம்லா சுற்றுலா சென்றார். இவரும் மனைவியும் அதிகாரபூர்வ காரில் செல்ல உறவினர்கள் வாடகைக் காரில் பல் இடங்களையும் சுற்றிப்பார்த்தனர்.

இப்படியாக அவர் தன் குடும்பத்துடன் சிம்லாவில் உள்ள இயற்கை எழில் நிரம்பிய, ஆனால் உயர் பாதுகாப்புப் பகுதியான மஷோபாரா மலைப்பகுதியில் உள்ள ஜனாதிபதி ஓய்வு இல்லத்திற்குச் சென்றுள்ளார். ஆனால் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உரிய அனுமதி பெறவில்லை, உயர் பாதுகாப்பு பகுதியான இங்கு ஜனாதிபதி ஓய்வு மாளிகையில் நுழைய சிறப்பு அனுமதி தேவை எனவே அனுமதிக்க முடியாது என்று ஓய்வு மாளிகை அலுவலர்கள் மறுத்து விட்டனர்.

SCROLL FOR NEXT