இந்தியா

பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

செய்திப்பிரிவு

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற உள்ள வசந்தோற்சவத்தை முன்னிட்டு, நேற்று கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

திருமலை திருப்பதி தேவஸ் தானத்துக்கு உட்பட்ட திருச் சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 3 நாட் கள் வருடாந்திர வசந்தோற்சவ விழா நடைபெற உள்ளது. இதை யொட்டி, ஆகமவிதிகளின்படி நேற்று காலை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

கோயில் கற்பகிரகம் உட்பட துணை சன்னதிகள், விமான கோபுரம், கொடிக்கம்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் பன்னீர், சந்தனம், குங்குமம், மஞ்சள், பச்சை கற்பூரம் ஆகிய வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தப்பட்டது.

இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தம்பதியினர், இணை நிர்வாக அதிகாரி போலா பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றதால் நேற்று காலை 10 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT