இந்தியா

வாக்குப்பதிவு இயந்திர குறைகளை களைய புதிய மென்பொருள் தீர்வாகுமா? - காஞ்சிபுரத்தை சேர்ந்த கண்டுபிடிப்பாளர் சஜாத் பேட்டி

ஆர்.ஷபிமுன்னா

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்) மீது எழுந்துள்ள புகாருக்கு தீர்வாக ஒரு புதிய மென்பொருள் முன்னிறுத்தப்பட் டுள்ளது. இதன் தொழில்நுட்ப செயல்முறையை தொகுத்திருப்ப தாக கூறுகிறார்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சையத் ஹெச்.சஜாத் உசைன். 2010-ல் இதற்கு காப் புரிமையும் பெற்ற சஜாத், அதை அமலுக்கு கொண்டுவர அரசியல் வாதிகள், அதிகாரிகள் என அலைந்து கொண்டிருக்கிறார். 10-ம் வகுப்பு மட்டுமே பயின்ற இவர் காஞ்சிபுரம் நகர இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக உள்ளார். இவர் தன் மென்பொருள் செயல்முறை குறித்து ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி வருமாறு:

உங்கள் கண்டுபிடிப்பு பற்றி சுருக்கமாகக் கூறுங்கள்?

நான் கண்டுபிடித்திருப்பது இவிஎம் உடன் இணைக்கும் கணினியின் மென்பொருள் செயல் முறை மட்டுமே. இதை என்னிடம் பெற்று தேர்தல் ஆணையம் தற்போது தன்னிடம் உள்ள இவிஎம்களில் இணைத்து செயல்படுத்தலாம். எனது கண்டு பிடிப்பின்படி வாக்காளர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்வதன் மூலமே வாக்களிக்க முடியும். இது ஒருவர் வாக்களித்து முடித்தவுடன் தானாகவே பூட்டிக் கொள்ளும். பிறகு மற்றவர் வாக்களிக்கும்போது மட்டுமே மீண்டும் திறக்கும். இவற்றில் வாக்களித்தவர்கள் எண் ணிக்கை, இட விவரம் ஆகியவை இணையம் வழியாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும் பதி வாகும். வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தனர் என்ற விவரம் தேர்தல் அதிகாரிக்கு காட்டாது.

இதனுடன் ‘விவிபாட்’ எனப்படும் ஒப்புகை சீட்டு முறையையும் இணைத்து செயல்படுத்தலாம். இந்த கைரேகை வாக்களிப்பு முறை வங்கதேசம், ஜமாய்கா உள்ளிட்ட நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.

இணையதள இணைப்புடன் இவிஎம் செயல்பட்டால் அதில் சட்டவிரோத ஊடுருவல் (ஹேக்) செய்ய முடியும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளதே…

அவர்கள் கூற்றின்படி இவிஎம் களைத் திறந்தால் தான் ஊடுருவ முடியும். ஆனால் தேர்தல் சமயத்தில் பல்வேறு இடமாற்றங் களுக்கு உள்ளாகும் இவிஎம்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்த சமயங்களில் அதன் பாதுகாப்பை லட்சக்கணக்கான வாக்குச்சாவடிகளில் ஆணையத் தால் நூறு சதவீதம் உறுதி செய்ய முடியாது. இதன் மீதுதான் 15-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. இணையம் மூலம் செயல்படும் முறைகளில் ஊடுருவல் செய்ய முடியும். ஆனால், மின்கம்பி (வயர்) மூலமாக கணினியுடன் இவிஎம் இணைத்து மின்னணு முறையில் செயல்படுவதால், ஊடுருவல் சாத்தியமில்லை. ஒருவேளை, இவிஎம்-ல் ஊடுருவல் செய்ய முயன்றால், கணினியில் ‘பிழை (எர்ரர்)’ எனக் காட்டி இவிஎம் செயல்படாது.

இதை அமலாக்க நீங்கள் இதுவரை எடுத்த முயற்சிகள் என்ன?

காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களிடம் நேரில் விளக்கியுள்ளேன். கடந்த 2010-ல் எனது கண்டுபிடிப்பை மத்திய தேர்தல் ஆணையம் செயல் படுத்த உத்தரவிடும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன்.

எனது மனுவை ஏற்ற நீதிமன்றம் கண்டுபிடிப்பை தேர்தல் ஆணையத்தின் முன் விளக்கும்படி வழிகாட்டுதல் அளித்தது. ஆனால் எனது கண்டுபிடிப்பில் இன்னும் ஆய்வு தேவைப்படுகிறது எனக் கூறி விட்டது. எனவே, மீண்டும் 2011-ல் உயர் நீதிமன்ற அமர்வை அணுகியதில், எதிர்காலத்தில் சாத்தியப்படும் போது எனது கண்டு பிடிப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆணையத்துக்கு ஆலோசனை அளித்தது.

தற்போது இவிஎம் மீது புகார் எழுந்துள்ளதால், எனது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான சாத்தியங்களை ஆராய ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் குழு அமைக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் சமீபத்தில் மனு அளித்துள்ளேன். இவ்வாறு சஜாத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT