இந்தியா

ஆசிரியர்களை கிண்டல் செய்த ராம்கோபால் வர்மா மீது ஆந்திர போலீஸில் புகார்

செய்திப்பிரிவு

ஆசிரியர்களைக் கிண்டல் செய்த இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது ஆந்திர மாநிலத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல திரைப்பட இயக்குநரான ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தள கருத்துகளால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அமிதாப், ரஜினி, ராஜமவுலி உட்பட பல பிரபலங்களையும் கிண்டல் செய்து அவர்களின் ரசிகர் களின் கோபத்துக்கு ஆளாகி யுள்ளார்.

தற்போது, ஆசிரியர்களை தனது சமூக வலைத்தளத்தில் தீவிரமாக விமர்சித்துள்ளார் ராம் கோபால் வர்மா. “நான் படிக்கும் காலகட்டத்தில் எனக்கு ஆசிரியர் களாக இருந்த சரஸ்வதி, ராஜேஷ் வர் ஆகியோரைப் பிடிக்குமே தவிர, அவர்கள் மூலம் கற்றுக் கொண்டது எதுவும் இல்லை. ஆசிரியர்களிடம் கல்வி கற்பதை விட கூகுள் மூலம் கற்பது எவ் வளவோ மேல். சுவரில் செங்கற் களை அடுக்குவது போன்று பிள்ளைகள் மீது கல்வியை ஆசிரியர்கள் திணிக்கின்றனர்” என விமர்சித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று விஜயவாடா, விசாகப்பட்டினம், திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆசிரியர் சங்கத் தினர் ராம்கோபால் மீது புகார்கள் அளித்தனர். புனிதமான ஆசிரியர் தொழிலைக் கேவலப்படுத்தி வரும் வர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் ஆசிரியர் கள் வலியுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT