பெங்களூருவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் சாதி, மத பேதங்களை கடந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். அண்மையில் சில சாதி சங்கத்தினர் தமிழ்ச் சங்கத்தில் புகுந்து, தமிழர்களைச் சாதி ரீதியாக கூறுபோடுவதால் தமிழ் அமைப்பினர் அதிருப்தி அடைந் துள்ளனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு குறிப் பிட்ட சாதி சங்கத்தினர் தங்கள் சாதி தலைவரின் படத்தை தமிழ்ச் சங்கத்தில் வைத்தனர். இது கர்நாடக தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ. தாமோதரன் தலைமையில் செயற் குழு கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் தீவிர ஆலோசனைக்குப் பிறகு, சாதி தலைவரின் படத்தை அகற்றினர்.
கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் சி.ராசன், ‘தி இந்து'விடம் கூறும்போது, “கர்நாடகாவில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்கள் அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். தமிழர்களை மேலும் பல பிரிவுகளாக பிரிக்க முயலக் கூடாது. சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.