தேசிய மகளிர் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தேசிய மகளிர் ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம் தர வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு இணையான அதிகாரங்களை மகளிர் ஆணையம் பெற வேண்டும் என்று அந்த அமைச்சகம் கருத்துத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர் புடையோருக்கு சம்மன் அனுப்பும்போது, சம்பந்தப்பட்டவர் ஆஜராகாவிட்டால், அவரை சிறைக்கு அனுப்புவதற்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று பெண்கள் நலத்துறை அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.
இந்த யோசனைக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்துள்து. குற்றம் சாட்டப்படும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்வது, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனையை பெற்றுத் தருவது ஆகியவை எல்லாம் காவல்துறை மற்றும் நீதித்துறையின் நடவடிக்கைகளாகும். எனவே, அத்தகைய அதிகாரங்களை தேசிய மகளிர் ஆணை யத்துக்கு தரக் கூடாது.
அதோடு, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தனித்தனியாக இரண்டு தேர்வுக்குழுக்கள் இருக்க வேண்டும் என்ற யோசனை தேவை யற்றது. ஒரு குழுவே போதுமானது என்று மத்திய சட்டத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.