இந்தியா

மானிய காஸ் விலை சிலிண்டருக்கு ரூ.2 அதிகரிப்பு

பிடிஐ

மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்திலிருந்து 4-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை ஏற்றத்துக்கு பிறகு மானிய விலையிலான 14.2 கிலோ சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.425.06 ஆக இருக்கும். இதற்கு முன்பு ரூ.423.09 க்கு எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்தன.

இதற்கு முன்பு ஆகஸ்ட் 16-ம் தேதி 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.1.93 உயர்த்தப்பட்டது.

டீசலுக்கான மானிய சுமையிலிருந்து அரசு வெளிவந்த வழியைப் பின்பற்றி மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு மானிய சுமையிலிருந்து வெளியேற சமீபத்தில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி மாதம் 2 ரூபாய் அளவில் சமையல் எரிவாயுவுக்கான விலையை உயர்த்துவது என்கிற முடிவை எடுத்துள்ளது.

மண்ணெண்ணெய்க்கான விலையில் மாதம் 25 காசுகள் வீதம் 10 மாதங்களுக்கு உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி மூன்றாவது முறையாக மண்ணெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டது.

புதிய விலை உயர்வின்படி மும்பையில் மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ.15.93-க்கு விற்கப்படுகிறது.

மானியம் அல்லாத சமையல் எரிவாயுவின் தற்போதைய டெல்லி விலை ரூ. 466.50 ஆக உள்ளது. இதற்கு முன்பு ரூ.487 ஆக இருந்தது.

SCROLL FOR NEXT