இந்தியா

மும்பையில் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு சிலை

செய்திப்பிரிவு

கர்நாட இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியை கெளரவிக்கும் வகையில் மும்பையில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மாதுங்காவில் உள்ள சண் முகானந்தா சபா அரங்கில் 8 அடி உயரத்தில் அழகுற வடி மைக்கப்பட்டுள்ள அவரது சிலையை மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியது: எனது வீடும், எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் வீடும் அடுத்தடுத்து அமைந்திருந்தன. சிறுவயதில் எனது தாயாருடன் சேர்ந்து அவரது சங்கீதத்தை ரசித்திருக்கிறேன். அந்த நேரத்தில் என்னால் அதன் அருமையை உணர முடியவில்லை. பின்னாளில் அவரின் தெய்வீக சங்கீதத்தைக் கேட்கும்போதெல்லாம், புதிய தோர் உலகத்துக்கே சென்று விடு வேன் என்றார்.

தேசத் தந்தை மகாத்மா காந்தி, இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், லேடி மவுன்ட்பேட்டன், சரோஜினிநாயுடு ஆகியோர் எம்.எஸ். சுப்புலட்சு மியைப் பாராட்டி எழுதிய கடி தங்களும் சண்முகானந்தா சபாவில் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எஸ்.சுப்புலட்சுமி அங்கு கர்நாடக சங்கீத கச்சேரி நடத்தியுள்ளார். அதை நினைவுகூரும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT