இந்தியா

டெல்லியில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம்

செய்திப்பிரிவு

டெல்லியில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

தெற்கு டெல்லியில் உள்ள முன்ரிகா எனும் பகுதியில், கடைக்குச் சென்ற சிறுமியை கடத்திச் சென்ற நபர், அந்த சிறுமியை கற்பழித்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 10.30 மணிக்கு நடைபெற்றுள்ளது.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து சிறுமி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக டெல்லி சாப்டர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூரில், இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நரேந்திர மோடி, வடகிழக்கு மாநிலத்தவருக்கு தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT