இந்தியா

தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் விபத்து: உ.பி.யில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 52 பயணிகள் காயம்

பிடிஐ

உத்தரபிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற் பட்டதால், மகாகவுசல் எக்ஸ் பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. இதில் 52 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து டெல்லி நிஜாமுதீன் செல்லும் மகாகவுசல் எக்ஸ்பிரஸ் நேற்று அதிகாலை 2.20 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் வழியாக சென்று கொண்டிருந்தது. மகோபா மாவட்டம் மஹபா ரயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது, திடீரென 8 பெட்டிகள் தடம்புரண்டன.

இதில் 52 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அவர்களை உடனடியாக ஜான்சி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

மகாகவுசல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தால், 400 மீட்டர் தூரத்துக்கு தண்டவாளம் கடும் சேதம் அடைந் தது. அதனால், அந்த வழியில் ரயில் போக்குவரத்து ஸ்தம் பித்தது. 14 ரயில்கள் ரத்து செய் யப்பட்டன. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட் டுள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை ஐசிஎப் பெட்டிகள்

ஏடிஜி தல்ஜித் மேலும் கூறும்போது, ‘‘முதல்கட்ட விசா ரணையில் விபத்துக்குப் பின்னணியில் தீவிரவாத சதி எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. விபத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அனைத்தும் சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை. பெட்டிகள் தடம்புரண்டாலும் ஒன்றன் மீது ஒன்றாக ஏறி நசுங்கவில்லை. இதனால் விபத்தில் சேதம் மிக குறைவாக உள்ளது’’ என்றார்.

அமைச்சர் விளக்கம்

டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்கா பங்கேற்றார். அப்போது அவர் கூறும்போது, ‘‘விபத்து நடந்த இடத்தில் மண்டல ரயில்வே மேலாளர் உடனடியாக ஆய்வு செய்துள்ளார். அப்போது தண்ட வாளத்தில் புதிதாக விரிசல் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்துள் ளார். அந்த விரிசல் திடீரென ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT