சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராயை விடுவிக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு மனுவை இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரிப்பதாக தெரிவித்தது. சுப்ரதா ராய் தரப்பில் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகிறார்.
வழக்கின் பின்னணி:
சஹாரா குழுமத்தின் குறிப்பிட்ட பங்குகளை செல்லாது என்று பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இதனால் பாதிக்கப்பட்ட சிறு முதலீட்டாளர்களுக்கு ரூ.20,000 கோடியை திருப்பி அளிக்குமாறு சஹாரா குழுமத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் ரூ.15,000 கோடி வரை முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுவிட்டதாகவும் ரூ.5000 கோடி அளவுக்கு மட்டுமே பாக்கி உள்ளது என்றும் சஹாரா குழுமம் கூறுகிறது.
பணத்தைப் பெற்ற முதலீட்டாளர்களின் பட்டி யலை செபியிடம் சஹாரா அளித்துள்ளது. ஆனால் அந்த பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து செபி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அவர் ஆஜராகாததால் லக்னோவில் அவர் கைது செய்யப்பட்டார்.