இந்தியா

தேசத்துக்கு விரோதமாக பேசுவதா?-ஆமிருக்கு பாரிக்கர் கண்டனம்

செய்திப்பிரிவு

‘‘தேசத்துக்கு விரோதமாக பேசுபவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்’’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசினார்.

பாலிவுட் நடிகர் அமீர்கான் கடந்த ஆண்டு ஒரு விழாவில் பேசும்போது, ‘‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. குழந்தைகளின் பாதுகாப்புக்காக நாம் குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறி விடலாமா என்று என் மனைவி கிரண் என்னிடம் கேட்டார்’’ என்று கூறினார். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் புனேவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கடந்த சனிக்கிழமை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘தேசத்துக்கு விரோதமாக பேசுபவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். நாட்டை விட்டு செல்லலாமா என்று அவரது மனைவி கேட்டதாக கூறியது ஆணவமான பேச்சு. நடிகருக்கு மட்டுமல்லாமல், அவர் தொடர்பு வைத்துள்ள ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துக்கும் பாடம் கற்பிக்க வேண்டும்’’ என்றார்.

அவர் மேலும் பேசுகையில், ‘‘தேசத்தைப் பற்றி இழிவாக ஒருவர் எப்படி துணிச்சலாக பேசலாம்? அப்படிப்பட்டவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். அந்த ஆன்லைன் நிறுவனத்திடம் பொருட்கள் வாங்கியவர்கள் ஏராளமானோர் அவற்றை திருப்பிக் கொடுத்து பாடம் கற் பித்தனர். அதன்பிறகே ஆமிர்கான் தொடர்பான விளம்பரத்தை அந்நிறுவனம் நீக்கியது’’ என்றார்.

SCROLL FOR NEXT