விசாகப்பட்டினம் - ஹைதராபாத் இடையே செல்லும் விசாகா எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 16-ம் தேதி செகந்திராபாத்தில் பயணிகளை இறக்கி விட்டது.
அதன் பிறகு, பராமரிப்பு பணிகளுக்காக இந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் செகந்திராபாத் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், அந்த ரயில் பெட்டியை பழுது பார்க்க இரண்டு ரயில்வே தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அப்போது ரயில் பெட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியது.
செகந்திராபாத் ரயில்வே போலீஸார் விரைந்து சென்று சென்று பார்த்தபோது கழிவறையில் மனித எலும்புக் கூடு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது ஆணின் எலும்புக் கூடு என ரயில்வே போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.