காங்கிரஸ் கட்சி தனது செய்தித் தொடர்பாளர் குழு மீது அதிக கவலை கொள்ளத் தொடங்கியுள் ளது. அக்குழு வெளியிடும் செய்தி கள் பரபரப்புடன் பத்திரிகைகளில் இடம் பெறாததால் இக்குழுவில் மாற்றம் செய்ய முடிவு செய் துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குழுவின் பொறுப் பாளராக ரந்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளார். இவர், கட்சியின் செய்தித் தொடர்பு செயல்பாடுகளை கடந்த இரு ஆண்டுகளாக நன்கு முன் னேற்றி இருப்பதாகக் கருதப்படு கிறது. இதை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவருக்கு நெருக்கமான தலைவர்கள் நம்புகின்றனர். எனினும், இதற்கேற்ற வகையிலான பலன் இன்னும் கட்சிக்கு கிடைக்க வில்லை என கட்சியின் பெரும் பாலான தலைவர்கள் கருதுகின்ற னர். இத்தனைக்கும் பழமைவாய்ந்த கட்சியாக பெயர் எடுத்த காங்கிர ஸின் அரசியல் செயல்பாடுகள் சமூக இணையதளங்களிலும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த அளவுக்கு அதன் செய்திகள் நாளிதழ்களில் இடம்பெறத் தவறுவதாக காங்கிரஸார் கவலை கொண்டுள்ளனர். இதனால் செய்தி தொடர்பாளர் குழுவில் கட்சித் தலைமை மாற்றம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “கடந்த இரு ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியை எங்கள் கட்சி விமர்சித்து வருவது பெரிய விஷயமல்ல என்பது போல் பத்திரிகைகள் எண்ணத் தொடங்கிவிட்டதாக எங் களுக்கு தோன்றுகிறது. ஏனெனில் பாஜகவின் பல்வேறு சாதாரண செய்திகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் கூட எங்களின் முக்கிய செய்திகளுக்கு கிடைப்ப தில்லை. இதற்கு நாங்கள் அந்த செய்திகளை சரியாக முன்வைக் காதது காரணமாக இருக்கலாம் என கருதுகிறோம். எனவே செய்தித் தொடர்பாளர் குழுவில் மாற்றம் செய்ய தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.
காங்கிரஸின் இந்தக் குழு, செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் மூத்த செய்தி தொடர்பாளர்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இதில் மூத்த செய்தி தொடர்பாளார்கள் பிரிவில் அஜய் மாக்கன், குலாம்நபி ஆசாத், அனந்த் சர்மா, டாக்டர் பி.சி.ஜோஷி, முகுல் வாஸ்னிக், ப.சிதம்பரம், சல்மான் குர்ஷீத், சத்யவர்த் சதுர்வேதி, ஷக்கீல் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இவர்களில் சதுர்வேதி, வாஸ்னிக், ஜோஷி ஆகியோர் செய்தியாளர் கூட்டம் நடத்துவதில்லை. குர்ஷித், ஷக்கீல் ஆகியோர் மிக அரிதாகவே இக்கூட்டம் நடத்துகின்றனர். ப.சிதம்பரம், மாக்கன், ஆசாத் ஆகியோர் கூட செய்தியாளர்கள் முன் அதிகம் தென்படுவதில்லை.
செய்தித் தொடர்பாளர் குழுவில் 26 பேர் இடம் பெற்றிருந்தும் அபிஷேக் சிங்வி மட்டுமே பெரும் பாலான கூட்டங்களில் பேசி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக சிங்வி செய்தியாளர்களிடம் பேசி வந்தாலும் இன்னும் அவர் மூத்த செய்தித் தொடர்பாளராக உயர்த்தப் படாமல் உள்ளார். செய்தித் தொடர் பாளர்கள் 26 பேரில் பலரும் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவி லேயே கூட்டங்களை நடத்தியுள்ள னர். இத்தனைக்கும் செய்தியாளர் குழுவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த மணிஷ் திவாரி மீண்டும் இணைக்கப்பட்டும் அதற்கு பலனில்லை என கூறப்படுகிறது.