இந்தியா

பாம்பூர் தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு காரோட்டிய ஓட்டுநர் அடையாளம் தெரிந்தது

பிடிஐ

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாம்பூரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தற் கொலைப்படை தீவிரவாதிகளை காரில் அழைத்து வந்த நபரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 25-ம் தேதி பாம் பூரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 8 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தீவிரவாதிகளை காரில் அழைத்து வந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாபா ரெஷி என்ற இடத்தில் இருந்து, தாக்குதல் நடத்தப்படு வதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகளை அந்த நபர் காரில் அழைத்து வந்துள்ளார். பின்னர் புலவாமா மாவட்டத்தில் ஒரு வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளார்.

அந்த டிரைவர் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு தலைமறை வாக உள்ளார். அவர் தீவிரவாதி களுக்காக பணியாற்றுபவர் என உள்ளூர் போலீஸாரால் கருதப்பட் டாலும், அதுதொடர்பாக எவ்வித ஆதாரங்களும் இதுவரை கிடைக்க வில்லை. தற்போது சில ஆதாரங் களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். எனினும் அந்த நபர் குறித்த விவரங்களை வெளியிட பாதுகாப்பு படையினர் மறுத்துவிட்டனர்.

SCROLL FOR NEXT