பணியிடங்களில் பாலியல் கண்ணோட்டத்தில் பெண்களை அணுகும் அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் மார்க்சிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்.
பிகார் மாநிலம் புத்தகயையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்க தேசிய மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:
பாலியல் ரீதியிலான தொல்லை களே பெண்கள் எதிர்கொள்ளும் தலையாய சவால். பணிபுரியும் இடங்களில் பெண்கள் மீது பாலியல் நோக்கத்துடன் அணுகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
பாலியல் வன்முறைகளுக்கு எதிராக மகளிர் அமைப்புகள் ஒன்று திரண்டு போராட வேண்டும். இந்த பிரச்சினைக்கு பல பரிமாணங்கள் உள்ளன. லட்சக்கணக்கான பெண்களின் அனுபவத்தையும் சுயலாபத்துக்காக அவர்கள் பயன்
படுத்தப்படுவதையும் பிரதி பலிப்பதுதான் கும்பல் ஒன்றால் டெல்லியில் வன்புணர்வுக்கு பெண் ஆளான சம்பவம். பணி புரியும் இடங்களில் பெண்களிடம் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தப்படு கின்றன. இதனால் மகளிருக்கு அடக்குமுறை சூழல்தான் ஏற்படுகிறது
எம்பி, எம்.எல்.ஏ.க்களுக்கு நடத்தை நெறி
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் களுக்கு நடத்தை நெறி வகுக்கப்படவேண்டும். ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது சம்பந்தப்பட்ட நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றி அவர்களை கண்டித்து நடத்தை மீறலுக்காக சஸ்பெண்ட் செய்யவேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் மீது தாக்கு
வகுப்புவாதத்தின் அடையாள மாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் மகளிருக்கு எதிரான மற்றொரு சவாலாக விளங்குகிறது. மகளிர் உரிமை என்கிற கோஷத்தை எழுப்பி வகுப்புவாத கொள்கைக்கு பெண்களை பயன்படுத்துகிறது ஆர்எஸ்எஸ்.
உத்தரப்பிரதேசம் முசாபர்நகரில் மகளிரை பாதுகாப்போம் என்கிற போர்வையில் உருவாகி
யுள்ள மகளையும் மருமகளையும் பாதுகாப்போம்’ என்கிற அமைப் பானது கவுரவ கொலைகளை நடத்தும் அதே சமூகத்திலிருந்து உருவானதுதான்.
பாலியல் கொடுமைகள் போன்ற உண்மையான சில பிரச்சினைகளில் சிலவற்றை மட்டும் தெரிந்தெடுத்து பயன்படுத்தி வகுப்பு சாயம் பூசப்படும் ஆபத்தை மகளிர் அமைப்புகள் உணரவேண்டும். பலாத்கார வழக்குகளில் தொடர் புடைய ஆசாராம் பாபுவுக்கு ஆதரவாக காவி அமைப்புகள் நிற்பது கண்டிக்கத்தக்கது என்றார் பிருந்தா காரத்.