இந்தியா

ஹைதராபாத் பிரியாணிக்கு புவிசார் குறியீடு வழங்க மறுப்பு

செய்திப்பிரிவு

ஹைதராபாத் பிரியாணிக்கு புவிசார் குறியீடு உரிமம் கோரப்பட்ட நிலையில் உரிய ஆதாரங்களைச் சமர்பிக்க தவறியதால் அதனை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியாணிக்கு தனியான வரலாறு உண்டு. கி.பி. 2-ம் நூற்றாண்டில் பாரசீக நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் பிரியாணி நுழைந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

தற்போது நமது நாட்டில் பலவகையான பிரியாணி உணவுகள் கிடைக்கின்றன. இதில் மிகவும் பிரபலமானது முகல் பிரியாணி. முகலாயர்கள் காலத் தில் இந்த உணவு சமைக்கப்பட்ட தால் இதற்கு முகல் பிரியாணி என பெயர் வந்ததாக கூறப்படுவது உண்டு.

இதேபோல் லக்னோ பிரியாணி, காஷ்மீர் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாக்கட்டு, ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் நிஜாம் பிரியாணி, மலபார் பிரியாணி என பல ரகங்கள் இருக்கின்றன.

இதில் ஹைதராபாத் நிஜாம் பிரியாணிக்கு தனிச் சிறப்பு உள்ளது. மன்னர்கள் காலத்தில் பின்பற்றப்பட்ட அதே தயாரிப்பு முறையை தற்போதும் தொடர் வதால், ஹைதராபாத் செல்பவர் கள் அந்த பிரியாணியை ஒருபிடி பிடிக்காமல் திரும்புவதில்லை.

இத்தகைய சிறப்பு பெற்ற ஹைதராபாத் பிரியாணிக்கு புவிசார் குறியீடு வழங்க கோரி டெக்கான் பிரியாணி மேக்கர்ஸ் அமைப்பினர் சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால் அதற்கான உரிய ஆதாரங்கள், வரலாற்று சிறப்புகள் ஆகியவற்றை டெக்கான் பிரியாணி மேக்கர்ஸ் சரியாக எடுத்துரைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஹைதராபாத் பிரியாணிக்கு புவிசார் குறியீடு வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT