இந்தியா

அம்பானிகளுக்கு சாதகமானவர் மோடி: கேஜ்ரிவால்

செய்திப்பிரிவு

அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்குத்தான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வளர்ச்சியின் நாயகனாக இருக்கிறார் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

குஜராத்தில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மோடி கூறியிருந்தார். இது தொடர்பான உண்மையை அறிய கேஜ்ரிவால் அந்த மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டார். முந்த்ரா தாலுகாவில் உள்ள விவசாயிகளிடம் கேஜ்ரிவால் உரையாடினார்.

பின்னர் கேஜ்ரிவால் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: “அரசு உதவியுடன் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் நிலத்தை கையகப்படுத்துகின்றன. குஜராத் தின் மொத்த பகுதியும் விற்பனைக்கு என்று கூறுமளவுக்கு, இங்குள்ள நிலம் அனைத்தும் விற்பனைக்கு தயாராக உள்ளது. அம்பானி போன்ற பணக்காரர்க ளுக்குத்தான் மோடி வளர்ச்சியின் நாயகனாக உள்ளார்.

தொழில் நிறுவனங்கள் கருப்பு பணத்தை சம்பாதித்துள்ளன. ஊடகங்கள் மூலம் குஜராத்தில் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், மக்கள் யாரும் மனநிறைவுடன் இல்லை” என்றார்.

SCROLL FOR NEXT