மக்களவையில் ஆதார் மசோதாவை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் தாக்கல் செய்த மனுவுக்கு அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆதார் மசோதா மக்களவை யில் நிறைவேறியது. பின்னர் மாநிலங்களவைக்கு அனுப்பப் பட்டது. அங்கு பல்வேறு திருத்தங் கள் செய்யப்பட்டு மீண்டும் மக்கள வைக்கு திருப்பி அனுப்பி வைக் கப்பட்டது. இந்த திருத்தங்களை நிராகரித்த மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், பழைய வடிவிலேயே பண மசோதாவாக நிறைவேற்றினார்.
இந்நிலையில், மக்களவைத் தலைவரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலை வர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் நீதிபதி என்.வி.ரமனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ரமேஷ் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ப.சிதம்பரம் வாதிடும் போது, “மாநிலங்களவையின் மறு ஆய்வை தவிர்ப்பதற்காக, ஆதார் மசோதா பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்கி வாதிடும்போது, “மக்களவைத் தலைவரின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. மேலும் அரசியலமைப்பு சட்டத்தில் ஆதார் மசோதாவை பண மசோதாவாக நிறைவேற்ற முடியும்” என்றார்.
இதைக்கேட்ட நீதிபதி அரசுத் தரப்பு வழக்கறிஞரின் எதிர்ப்பு களுக்கும் பதில் அளிக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசார ணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.