இந்தியா

69 பேர் படுகொலை செய்யப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கில் இன்று தீர்ப்பு

பிடிஐ

குஜராத் 2002 கலவரத்தின்போது, குல்பர்க் சொசைட்டி பகுதிக்குள் 69 பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத் தைத் தொடர்ந்து, 2002-ம் ஆண்டு குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்போது, குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்குள் புகுந்த வன் முறைக் கும்பல் அங்கிருந்த முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 69 பேரை படுகொலை செய்தது. இதில், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரியும் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 8 மாதங்களுக்கு முன் விசாரணை முடிவுக்கு வந்த நிலை யில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி தேசாய் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.

இவ்வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வந்தது. மே 31-ம் தேதி தீர்ப்பு வழங்கும்படி சிறப்பு நீதிமன்றத் துக்கு உச்ச நீதிமன்றம் அறி வுறுத்தி இருந்தது.

இவ்வழக்கில் 66 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில், 9 பேர் கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். மற்றவர்கள் ஜாமீனில் உள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் பிபின் படேல், தற்போது மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். 2002-ல் படுகொலை நிகழ்ந்தபோதும் அவர் கவுன்சில ராக இருந்தார். கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தொடர்ந்து நான்காவது முறையாக அவர் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த வாரம் குற்றம்சாட்டப்பட் டவர்களில் நாராயண் டாங்க், மற்றும் பாபு ரதோட் ஆகிய இரு வரும் தாங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க, தங்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்த னர். ஆனால், தீர்ப்பு விரைவில் வழங்கப்பட இருக்கும் நிலையில் அது தேவையில்லை எனக் கூறி மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர், இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என்று வாதிட்டார்.

ஆனால், திட்டமிட்ட சதி என் பதை மறுத்த குற்றம்சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர், காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரி, கும்பல் மீது சில முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஆத்திரமுற்று வன் முறை நிகழ்ந்ததாக வாதிட்டார்.

உச்ச நீதிமன்றக் கண்காணிப் பின் கீழ், குஜராத் வன்முறை தொடர்பாக நடைபெறும் 9 வழக்குகளில் குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கும் ஒன்று.

SCROLL FOR NEXT