இந்தியா

மெட்ரோ ரயிலால் பெங்களூருவில் மாசு குறைந்தது

செய்திப்பிரிவு

பெங்களூருவில் மெட்ரோ ரயில் அறிமுகமான பின் காற்று மாசு கணிசமாக குறைந்துள்ளதாக கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக மாசு கட்டுப் பாட்டு வாரியத் தலைவர் லக்ஷ்மன் கூறும்போது, “பெங்களூருவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் முறையாக பையப்பனஹள்ளியில் இருந்து எம்.ஜி.சாலைக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.

கடந்த ஒரு மாதத்தில் மெட்ரோ ரயில் செல்லும் வழியில் காற்று மாசுபாட்டை ஆராய்ந்த போது ஆச்சரியமான மாற்றங்கள் தென் பட்டன. அதாவது ரயில் மற்றும் பேருந்து நிலையம் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் கூட மாசு குறைந்துள்ளது. காற்றில் 6 சதவீதமாக இருந்த சல்ஃபர் டை ஆக்ஸைடின் அளவு தற்போது 5.1 சதவீதமாக குறைந்துள்ளது. இதே போல நைட்ரஜன் டை ஆக்ஸைடின் அளவும் 40.1 சதவீதத்தில் இருந்து 26.9 சதவீதமாக குறைந்துள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT