பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று காலை கட்சியின் மூத்த தலைவர் அத்வானியை நேரில் சென்று சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இது தவிர ட்விட்டர் இணையதளத்திலும் : அத்வானி அவர்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள். அவர் எப்போதுமே எங்களுக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாக இருந்துள்ளார். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
உ.பி. பரைச்சில் இன்று பா.ஜ.க. பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறார் நரேந்திர மோடி. விமானநிலையம் செல்லும் முன்னர், அத்வானியை அவரது 86-வது பிறந்தநாளை ஒட்டி நேரில் சென்று சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதோடு சுமார் 15 நிமிடங்கள் அவருடன் ஆலோசனை நடத்தினார்.
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மோடியை, நாடாளுமன்ற தேர்தல் குழு தலைவராக பா.ஜ.க. தேர்ந்தெடுத்த போது எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். பின்னர், ராஜினாமாவை வாபஸ் பெற்றதோடு, கடந்த செப்டம்பர் மாதம் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது அதனை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.