இந்தியா

உறவை வலுப்படுத்தவே ஆப்பிரிக்க நாடுகளில் பயணம்: பிரதமர் மோடி தகவல்

பிடிஐ

ஆப்பிரிக்க நாடுகளுடன் உறவை வலுப்படுத்தவே அங்கு பயணம் செல்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி இன்று முதல் 5 நாட்களுக்கு மொசாம் பிக், தென் ஆப்பிரிக்கா, தான் சானியா, கென்யா ஆகிய 4 ஆப்பிரிக்க நாடுகளில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற் கொள்ள உள்ளார்.

மொசாம்பிக் நாட்டில் பயணத்தை தொடங்கும் பிரதமர் பிறகு தென் ஆப்பிரிக்கா, தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இதில் தென் ஆப்பிரிக்காவில் மட்டும் 2 நாட்களும் மற்ற நாடுகளிலும் தலா ஒரு நாளும் அவர் பயணம் செய்கிறார்.

இப்பயணத்தில் ஹைட்ரோ கார்பன், கடல்பயண பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்து ழைப்பு வலுப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

இப்பயணம் குறித்து மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

இந்தியா ஆப்பிரிக்கா இடை யே உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் அங்கு செல்கிறேன். எனது பயணம் மொசாம்பிக் நாட்டில் சுருக்கமான ஆனால் முக்கியமான பயணத்துடன் தொடங்குகிறது. தென் ஆப்பிரிக் காவில் பிரிட்டோரியா, ஜோகன் னஸ்பர்க், டர்பன், பீட்டர்மாரிஸ்ட் பர்க் ஆகிய நகரங்களுக்கு செல்கிறேன். தான்சானியாவில் அந்நாட்டு அதிபர் ஜான் மகுஃபுலியுடன் பேச்சு நடத்து கிறேன். சோலார் மமஸை சந்திக்கிறேன். இந்திய சமூகத் தினருடன் கலந்துரையாடுகிறேன்.

கென்ய பயணத்தை பொறுத்த வரை அந்நாட்டுடன் பொருளாதார மற்றும் இருநாட்டு மக்கள் இடையிலான உறவுகளை மேம் படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும். இவ்வாறு மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT