இந்தியா

கார்கிலில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் மூவர் பலி

பிடிஐ

காஷ்மீரில் கார்கில் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர்.

இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாரளர் 'தி இந்துவிடம்' கூறும்போது, "கார்கில் பகுதியில் படாலிக் செக்டாரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். அவர்களது சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மீட்கப்பட்டது" என்றார்.

ஜம்மு காஷ்மீரில் இடைவிடாத மழை மற்றும் பனிப் பொழிவால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக லடாக் பகுதியில் அடுத்தடுத்து பனிச்சரிவு ஏற்பட்டது.

கார்கிலின் படாலிக் செக்டாரில் ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் 5 வீரர்கள் சிக்கிக் கொண்டனர். 2 வீரர்கள் மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் பலியாகினர்.

SCROLL FOR NEXT