நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முடிவுக்கு வந்தது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்கியது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 9-ம் தேதி முடிந்தது. பிறகு இரண்டாவது பகுதி மார்ச் 9-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவுபெற்றது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை அலுவல் 8 மணி 12 நிமிட நேரம் முடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்றத் தின் இரு அவைகளும் நேற்று மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன.