ரியல் எஸ்டேட் துறையில் கருப் புப் பணத்தை மறைக்க பினாமி பெயரில் சொத்துகளை வாங்கி னால் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
பினாமி பரிவர்த்தனை (தடை) சட்டம் 2016-க்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த சட்டம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இப்புதிய சட்டத்தில் பினாமி பரிவர்த்தனை புரிவோர்க்கு கடுமையான தண்டனை வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
‘பினாமி’ என்றால் ஒருவர் மற்றொருவர் பெயரில் சொத்து களை வாங்குவதாகும். பெரும் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக ‘பினாமி’ பெயரில் சொத்துகளை வாங்குகின்றனர். சொத்து ஒருவர் பெயரிலும் அதை அனுபவிப்பவர் மற்றவராகவும் இருந்தால் அது ‘பினாமி’ சொத்து எனப்படுகிறது.
இதுபோன்ற ‘பினாமி’ சொத் துகள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நேரடியாகவோ, மறை முகமாகவோ மற்றொருவர் பெயரில் வாங்கப்படுகிறது. வரி செலுத்துவதைத் தவிர்க்க இவ்விதம் சொத்துகள் ‘பினாமி’ பெயரில் வாங்கிக் குவிக்கப்படு கிறது.
இதைத் தடுக்கும் நோக்கில் பினாமி பரிவர்த்தனை (தடை) சட்டம், மக்களவையில் கடந்த ஆண்டு மே 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இது பின்னர் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட து. நாடாளுமன்ற நிலைக்குழு இது தொடர்பான அறிக்கையை கடந்த ஏப்ரலில் தாக்கல் செய்தது. இதையடுத்து கடந்த ஜூலை 27-ம் தேதி மக்களவையிலும் ஆகஸ்ட் 2-ம் தேதி மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது. 1988-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பினாமி பரிவர்த்தனை சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின்படி பினாமி பரிவர்த்தனையில் ஈடுபடுவோர் எவராக இருப்பினும் அவருக்கு குறைந்தபட்சம் ஓராண்டு கடுங்கா வல் தண்டனையும் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. அத்து டன் சொத்தின் சந்தை மதிப்பு விலையில் 25 சதவீதத்தை அப ராதத் தொகையாக விதிக்கவும் சட்டம் வகை செய்துள்ளது.
முந்தைய சட்டத்தில் பினாமி பரிவர்த்தனை புரிவோர் மீதான தண்டனை அதிகபட்சமாக 3 ஆண்டு வரை என இருந்தது. அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
புதிய சட்டத்தின்படி தவறான தகவலை அளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் வகை செய் யப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் படி எவரிடம் வேண்டுமானாலும் தகவலைக் கேட்கலாம். அவ்வி தம் கேட்கப்படும் நபர் தவறான தகவல் அளித்தால் அவருக்கு குறைந்தபட்சம் 6 மாத கடுங்காவல் தண்டனையும் அதிகபட்சமாக 5 ஆண்டு வரை விதிக்கவும் சட்டம் வகை செய்கிறது. அத்துடன் சொத்து மதிப்பில் 10 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படும்.
இருப்பினும் மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் (சிபிடிடி) அனுமதியின்றி எவர் மீதும் சட்ட ரீதியாக வழக்குப் பதிவு செய்ய முடியாது. ரியல் எஸ்டேட் துறையில் புழங்கும் கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வரு வதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்புதிய சட்டத்தின்படி புதிய ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு நிர்வாகி ஒருவரை நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. பினாமி பரிவர்த்தனை தொடர்பாக வரும் தகவல்கள் அனைத்தையும் திரட்டி பினாமி பரிவர்த்தனை நடைபெறுவதைத் தடுக்கலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுதவிர இந்த சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத் தியுள்ளது.