பஞ்சபூத திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
மகா சிவராத்திரிக்கு ஆந்திர அரசு சார்பில், வனத்துறை அமைச்சர் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி தம்பதியினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாணிக்கியால ராவ் ஆகியோர் நேற்று பட்டு வஸ்திரங்களைச் சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தேவஸ் தான நிர்வாக அதிகாரி பிரமராம்பிகை செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ஆந்திர அரசு சார்பில், அமைச்சர்கள் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி, மாணிக்கியால ராவ் ஆகியோர் நேற்று காணிக்கையாக பட்டு வஸ்திரம் வழங்கினர்.