இந்தியா

அதிநவீன ஏவுகணை வெற்றிகர சோதனை

பிடிஐ

நிலத்தில் இருந்து அதி விரைவாக பறந்து சென்று வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்த அதிநவீன ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதித்தது.

ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து லாஞ்சர் ஏவுதளம் மூலம் நேற்று மதியம் 12.40 மணிக்கு இந்த அதிநவீன ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது.

இதுகுறித்து டிஆர்டிஒ அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த ஏவுகணை வானில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. சராசரியாக 20 முதல் 30 கி.மீ வரை பாய்ந்து செல்லும் திறன் படைத்தது. எதிரிகளின் இலக்கை அதிவிரைவாக தாக்கி அழிக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT