அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு வீட்டு வரி பாக்கியை செலுத்துமாறு ஹைதராபாத் மாநகராட்சி நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 1990-ம் ஆண்டில் ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான ஜிடி மெட்லு என்ற பகுதியில் திராட்சை தோட்டத்தை வாங்கினார். இதற்கு ஜேஜே கார்டன்ஸ் என பெயரிடப்பட்டது.
அவ்வப்பொழுது ஓய்வெடுப்பதற் காக ஜெயலலிதா அங்கு செல்வது வழக்கம். இதுபோல, செகந்திராபாத் மாரேட்பல்லி என்ற இடத்தில் ராதா காலனி பகுதியில் உள்ள ஒரு பங்காளாவை (கதவு எண் 16) சசிகலா பெயரில் ஜெயலலிதா வாங்கி உள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக இந்த வீடு பூட்டியே காணப் படுகிறது. அதேநேரம் வீட்டு வரி ரூ.35,424 செலுத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக, ஹைதராபாத் மாநகராட்சி சார்பில் சசிகலாவுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வரி பாக்கியை உடனடியாக செலுத்துமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.