வடக்கு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். இதில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வடக்கு காஷ்மீரின் பண்டிப்போரா மாவட்டம், பார்ரே மொகல்லா என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பாது காப்பு படையினர் அங்கு விரைந்து சென்று அப்பகுதியை சுற்றிவளைத் தனர். அப்போது தீவிரவாதிகளுக் கும் பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை யில் தீவிரவாதி ஒருவர் கொல்லப் பட்டார். பாதுகாப்பு படை தரப்பில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார்” என்றார்.