இந்தியா

குஜராத் மக்களை நேசிக்கிறேன், ‘நமோ’வை அல்ல: மம்தா

செய்திப்பிரிவு

குஜராத் மாநில மக்களை நான் நேசிக்கிறேன். நமோவை அல்ல. பாஜக வகுப்புவாத கட்சி என்றார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகரில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் வெள்ளிக் கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது: நரேந்திர மோடி பெயரை நான் குறிப்பிடுவதில்லை என சிலர் பேசுகிறார்கள். ஒவ்வொ ருவர் பெயரையும் குறிப்பிட்டுப் பேச எனக்கு அவசியம் இல்லை. கொள்கைகள் பற்றிதான் நான் பேசுவேன். லட்சுமண ரேகை என்று உள்ளது. அரசியலில் கண்ணி யத்தை கடைபிடிப்பவன் நான். அதனால் தான் நான் அரசியல் ரீதியிலும் கொள்கைகள் பற்றியுமே பேசுகிறேன்.

நான் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜகவினர் போன்றவள் அல்ல. முந்தைய இடதுசாரி முன்னணி அரசு வாங்கிய கடனுக்காக வட்டி யாக மட்டும் ரூ. 74 ஆயிரம் கோடி வழங்கியுள்ளோம். குஜராத்தின் வளர்ச்சிக்காக புகழ் தேடுகிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

குஜராத்தில் நடந்தது போல மேற்கு வங்கத்தில் கலவரம் நடந்ததில்லை.

வகுப்புவாத பாஜக, காங்கிரஸின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வரக் கூடிய ஒரே கட்சி திரிணமூல் காங்கிரஸ்தான். விலைவாசி உயர்வுக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசே காரணம் என்றார் மம்தா.

SCROLL FOR NEXT