ராஷ்டிரிய ஜனதாதளக்கட்சியின் சர்ச்சைக்குரிய மொகமது ஷஹாபுதினை சிவான் சிறையிலிருந்து திஹார் சிறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஷஹாபுதின் மீது நிறைய ஊழல் வழக்குகள் உள்ளன, அவர் பிஹார், சிவான் சிறையில் இருந்து வருகிறார், ’சுதந்திரமான, நியாயமான விசாரணை நடைபெற அவரை திஹாருக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கிறோம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இரண்டு வேறுபட்ட சம்பவங்களில் 3 மகன்களை பறிகொடுத்த பிஹாரைச் சேர்ந்த சந்திரகேஷ்வர் பிரசாத் மற்றும் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ராஜ்தியோ ரஞ்சன் மனைவி ஆஷா ரஞ்சன் ஆகியோர் ஷஹாபுதினை திஹார் சிறைக்கு மாற்ற மனு செய்திருந்தனர்.
ஷஹாபுதின் மீது 45 கிரிமினல் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.