தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, எம்.பி.க்கள் என்னை பிரதமர் பதவிக்கு முன்னிறுத் தினால், அப்பதவியை ஏற்பது தொடர்பாக பரிசீலிப்பேன் என்று கூறினார்.
அமேதியில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: “உத்தரப் பிரதேசத்தில் ஜன நாயகம் வலுவாக இல்லை. மக்களின் பங்கேற்பு இருந்தால் தான் ஜனநாயகம் வலுவடையும்; வளர்ச்சிப் பணிகளும் நடை பெறும்.
இங்கு தனிநபர் துதிபாடுதான் அதிகமாக இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதிதான் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கிறார்.
சமாஜ்வாதி கட்சியில் ஒரு குடும்பம்தான் அப்பணியை மேற்கொள்கிறது. எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக பணியாற்ற முடியாத நிலை உள்ளது.
காங்கிரஸ் கட்சியிலும் சோனியா குடும்பத்தின் ஆதிக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அது தவறானது. அனைத்து முடிவுகளையும் 10, ஜன்பத் சாலையில் உள்ள இல்லமே (சோனியாவின் வீடு) எடுப்ப தில்லை. எங்கள் கட்சியில் அதிகபட்ச ஜனநாயக நடைமுறை பின்பற்றப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் விரைவில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்துவோம். கடந்த 30 ஆண்டுகளாக இந்த மாநிலம் வளர்ச்சிபெறாமல் மிகவும் பின்தங்கியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி வந்தால்தான் இந்த நிலை மாறும்.
பிரதமரை தேர்ந்தெடுப்பது எம்.பி.க்களின் உரிமையாகும். தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது ஜனநாயக நடைமுறை அல்ல. அது தனிநபர் துதிபாட்டில் ஈடுபடவே வழிவகுக்கும்.
கடந்த முறை தேர்தலுக்கு பின்பே காங்கிரஸ் எம்.பி.க்களால் பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் வழக்கம் இல்லை.
வரும் மக்களவைத் தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் வெற்றி பெற்று, எம்.பி.க்கள் என்னை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தால், அது குறித்து கண்டிப்பாக பரிசீலிப்பேன்” என்றார்.
தொடர்ந்து, தான் எம்.பி.யாக இருக்கும் அமேதி தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச் சிப் பணிகளை ராகுல் காந்தி பட்டியலிட்டார்.
தொலைநோக்குப் பார்வை யுடன், முழு பொறுப்புணர்வுடன் பணிபுரிய வேண்டும் என எனது தந்தை ராஜீவ் காந்தி கூறினார்.
அதன்படிதான் அமேதியிலும் டெல்லியிலும் செயல்பட்டு வருகிறேன் என்று ராகுல் கூறினார்.