சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது கருத்துகளை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வேட்புமனுத் தாக்கலின் போது, படிவம் 26-இல், வேட்பாளர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக இணையதளங்களின் விவரங்களை இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வேட்பாளர்கள், கட்சிகள் தவிர மற்றவர்கள் வெளியிடும் கருத்துகள் தொடர்பாக, செய்தி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்துடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் சார்ந்த சமூக ஊடகங்களில் அரசியல் சார்ந்த எவ்வித விளம்பரங்களும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் இன்றி வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.