இந்தியா

ஹைதராபாத் நகரில் பட்டாசு வெடித்ததில் 65 சிறுவர்கள் காயம்

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலம் உதயமான நிலையில், இந்த தீபாவளியை அந்த மாநில மக்கள் தலை தீபாவளியாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கடந்த 2 நாட்களாக ஹைதராபாத் உட்பட 10 மாவட்டங்களிலும் இரவும் பகலுமாக வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

இந்நிலையில், பட்டாசு வெடித்ததில் ஹைதராபாத் நகரில் மட்டும் 65 சிறுவர்கள் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் பலருக்கு கண்கள் பாதிப்படைந்தன. இவர்களில் 22 பேர் சரோஜினி கண் மருத்துவ மனையிலும், 33பேர் எல்.வி. பிரசாத் கண்மருத்துவமனையிலும், 13 பேர் உஸ்மானியா அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT