இந்தியா

பார்முலா 1 போட்டிக்கு தடை கோரிய மனு விசாரணைக்கு ஏற்பு

செய்திப்பிரிவு

நோய்டாவில் பார்முலா-1 கார் பந்தயப் போட்டியை நடத்த தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

வரும் சனிக்கிழமை பார்முலா-1 கார் பந்தயம் நடைபெற உள்ள நிலையில் இந்த் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமியிலான பெஞ்ச் முன்னர், அமித் குமார் என்பவர் பார்முலா 1 கார் பந்தயப் போட்டிக்கு தடை கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனு தாரர்: கடந்த 2011- ஆம் ஆண்டு நோய்டாவில் பார்முலா-1 கார் பந்தயப் போட்டி நடந்தது. அந்தப் போட்டியை நடத்தியதற்கான கேளிக்கை வரியை இன்னமும் உ.பி. அரசுக்கு அளிக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார். வரி பாக்கி இருக்கும் நிலையில், புதியதாக போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என்ற்ம் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில், தற்போதைய உ.பி. அரசும் அண்மையில் உச்ச நீதிமன்றத்தை அனுகியது என்பது குறிப்பிடத்தகக்கது.

கடந்த 2011- ஆம் ஆண்டு மாயாவதி அரசு ஜேப்பி நிறுவனத்திற்கு சாதகமாக வரி விலக்கு அளித்தது என்றும் அதனை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உ.பி. அரசு கூறியிருந்தது .

மணுவை எற்ற நீதிபதிகள், மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT