குடியரசுத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில் மும்பையைச் சேர்ந்த தம்பதி உட்பட 7 பேர் கடந்த 2 நாட்களில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தற்போதைய குடியரசுத் தலை வரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடி வடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான பணி களில் தேர்தல் ஆணையம் ஈடுபட் டுள்ளது. தேர்தல் தேதி ஜூலை 17-ம் தேதி என அறிவிக்கப் பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்கி, ஜூன் 28-ம் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து, வேட்புமனுத் தாக்கல் நேற்று முன்தினம் (ஜூன் 14) தொடங்கியது.
மத்தியில் ஆளும் கட்சியான பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சி யான காங்கிரஸ் மற்றும் மார்க் சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள் ளிட்டவை அடங்கிய கட்சிகளும் இதுவரை வேட்பாளரை அறிவிக்க வில்லை. அதேநேரம் கடந்த 2 நாட்களில் 7 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். முதல் நாளில் கட்சி பின்னணி இல்லாத தனி நபர்கள் 6 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
தேர்தல் மன்னன் என்று அழைக் கப்படும் கே.பத்மராஜன் (தமிழ கம்), ஆனந்த் சிங் குஷ்வாகா (மத்திய பிரதேசம்), ஏ. பாலா ராஜ் (தெலங்கானா), கொண்டேகர் விஜய்பிரகாஷ் (மகாராஷ்டிரா - புனே) மற்றும் தம்பதிகளான சாய்ரா பானோ முகமது படேல், முகமது படேல் அப்துல் ஹமீது (மகாராஷ்டிரா மும்பை) ஆகி யோர் மனுத்தாக்கல் செய்தனர்.
மும்பையைச் சேர்ந்த தம்பதி மனுத்தாக்கல் செய்த பின்னர், தேர்தல் அதிகாரியிடம் கூறும்போது, ‘எங்களில் ஒருவர் குடியரசுத் தலைவரானால், மற்றொருவர் குடியரசுத் துணைத் தலைவராக வந்தால் நல்லது’ எனக் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஜீவன் குமார் மிட்டல் என்பவர் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 2 நாட்களில் 7 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.