இந்தியா

கேரளாவில் பொது இடத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாக காதலர்களிடம் போலீஸார் கட்டப் பஞ்சாயத்து: பேஸ்புக்கில் வைரலாகி வரும் நேரலை காட்சிகள்

பிடிஐ

கேரளாவில் பொது இடத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறி, காதலர்களிடம் போலீஸார் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கடந்த 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் காதலர்கள் பொது இடங்களில் சந்தித்து, பரஸ்பரம் பரிசுகளைப் பரிமாறி தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.

அதே சமயம் கலாச்சார காவலர் கள் என கூறிக் கொள்ளும் ஒரு சில இந்து அமைப்புகள் காதலர்கள் தின கொண்டாட்டத்துக்கு இந்த ஆண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித் தன. மேலும் பொது இடங்களில் சந்தித்துக் கொண்ட காதலர்களுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் நடத்தி வைப்பது, பெற்றோர்களை அழைத்து வரச் செய்து எச்சரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன. குறிப்பாக கேரளாவில் இத்தகைய சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன.

இதைத் தொடர்ந்து கலாச் சாரத்தைப் பாதுகாப்பதாக கூறி கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பூங்காவில் நேற்று முன்தினம் காதலர்கள் இருவர் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த மகளிர் போலீஸார் இருவரையும் மிரட்டி காவல் நிலையத்துக்கு வரும்படி அழைத்துள்ளனர். அதற்கு காரணம் கேட்டதற்கு, பொது இடத்தில் அத்துமீறி அநாகரிகமாக நடந்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த இருவரும் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இந்த சம்பவத்தை பேஸ் புக்கில் நேரலையாக பதிவிட்டனர். அந்த நேரலை காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து அந்த இளைஞர் கூறும்போது, ‘‘தோழியின் தோள் மீது எனது கரத்தை வைத்தபடி பேசிக் கொண்டிருந்ததில் என்ன அத்துமீறல் கண்டுவிட்டீர்கள் என போலீஸாரிடம் கேள்வி எழுப்பி னேன். ஆனால் அவர்கள் அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. எங்களை மிரட்டுவதிலும், கட்டப் பஞ்சாயத்து செய்வதிலும் தான் குறியாக இருந்தனர்’’ என்றார்.

அந்த பெண் கூறும்போது, ‘‘எங் களது உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் போலீஸார் நடந்து கொண் டனர். இது தொடர்பாக போலீஸார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இத்தகைய மோசமான சூழ்நிலையை சந்தித் தவர்கள் போலீஸார் மீது வழக்கு தொடர வேண்டும்’’ என்றார்.

போலீஸார் கூறும்போது, ‘‘பொது இடத்தில் அவர்கள் இருவரும் அநாகரிகமாக நடந்து கொண்டனர். எனவே தான் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து 290-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT