பெங்களூருவின் அல்சூரில் உள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் திருவள்ளுவர் தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் ஆஞ்சநேயா, கே.ஜே.ஜார்ஜ், கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், பொதுசெயலாளர் எஸ்.எஸ். பிரகாசம், தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி உள்ளிட் டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது முதல்வர் சித்த ராமையா கர்நாடக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். பின்னர் பேசிய அவர், ‘‘கர்நாடகாவில் கவிஞர் சர்வக்ஞர் போல தமிழகத்தில் திருவள்ளுவர் வாழ்க்கை நெறிகளை போதித் துள்ளார். எனவே திருவள்ளுவரை கர்நாடகாவின் தமிழ் சர்வக்ஞர் என அழைக்கலாம். திருக்குறளை படித்தால் மனிதர்களின் வாழ்வு மேம்படும்’’ என்றார்.