இந்தியா

அகிலேஷ் - ராகுல் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்து நேற்று பிரச்சாரம் செய்தனர்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் சமாஜ்வாதியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டி யிடுகின்றன. இதையொட்டி தேர்தல் பிரச்சாரத்துக்காக ராகுல் காந்தி நேற்று லக்னோ சென்றார்.

அங்கு மாநில முதல்வர் அகிலேஷ் யாதவும் ராகுல் காந்தியும் இணைந்து நிருபர் களுக்கு பேட்டியளித்தனர். அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

சைக்கிளோடு (சமாஜ்வாதி யின் சின்னம்) கை இணைந் துள்ளது. இதனால் சைக்கிளின் வேகம் அதிகரித்துள்ளது. நானும் ராகுலும் சைக்கிளின் இரு சக்கரங்கள். இருவரும் இணைந்து செயல்படுவதால் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.

ராகுல் காந்தி கூறியதாவது: உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை, யமுனை நதிகள் சங்கமிக்கின்றன. அதே போல உத்தரப் பிரதேச தேர்த லில் சமாஜ்வாதியும் காங்கிர ஸும் சங்கமித்துள்ளன. இரு கட்சி களும் இணைந்து பாஜகவின் பிரிவினைவாத அரசியலை தோற் கடிப்போம் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அகிலேஷும் ராகுலும் இணைந்து லக்னோ நகரின் காந்தி சிலையில் இருந்து ஹஸ்ரத்கஞ்ச் வரை வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

SCROLL FOR NEXT