திருப்பதியில் கடத்த முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான செம்மரங் களை அதிரடி போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.
திருப்பதி சேஷாசலம் வனப் பகுதிகளில் இருந்து செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக திருப்பதி அதிரடிபோலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவாரி மேட்டு பகுதியில் மலையேறும் பயிற்சி பெற்ற அதிரடி போலீஸார் ஆயுதம் ஏந்தி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, திருப்பதி மிருகக் காட்சி சாலை அருகே ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இவர்கள், போலீஸாரைக் கண்ட தும் மரங்களைப் போட்டு விட்டு வனப்பகுதிக்குள் தப்பி விட்ட தாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கிருந்த செம்மரங் களை போலீஸார் கைப்பற்றினர்.
இதையடுத்து, சந்திரகிரி மண்ட லம்,ரங்கம்பேட்டை அருகே ஒரு கார் மற்றும் வேனில் கடத்திய 15 செம்மரங்கள் பிடிபட்டன. இதனை தொடர்ந்து திருப்பதி எம்.ஆர். பல்லி பகுதியில் நேற்று காலை வேனில் கடத்த முயன்ற செம்மரங் களை போலீஸார் பறிமுதல் செய்த னர். நேற்று ஒரே நாளில் 100 செம் மரங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் ஒரு கார், 2 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கார் ஓட்டுநர் ஒரு வரை போலீஸார் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங் களின் மதிப்பு ரூ.4 கோடி என கூறப்படுகிறது.