பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் நரிந்தர் ஆதியா. இவர் கடந்த ஆண்டு ஜூலை 9-ம் தேதி இந்தி நடிகை ராக்கி சாவந்துக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில் வால்மீகி சமூகத்துக்கு எதிராகவும் இந்து மதத்தை புண் படுத்தும் வகையிலும் ராக்கி சாவந்த் பேசி வருவதாக தெரிவித்திருந்தார். இவ்வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாததால், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவர் நீதிமன்ற உத்தரவை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து அவரை கைது செய்யும்படி லூதியானா நீதிமன்றம் நேற்று மீண்டும் உத்தரவிட்டது.