காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கர்னா பகுதியில் பாதுகாப்பு படையினர் முகாம் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு 3 வீரர்கள் காயமடைந்தனர்.
நாச்சின் கிராமத்தில் உள்ள இந்த முகாம் ஆயுதக் கிடங்கு என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக ஸ்ரீநகருக்கு ராணுவ விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீவிரவாதிகளை அடக்கிப் பிடிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.