இந்தியா

இலங்கையில் குழி தோண்டியபோது சிக்கிய மண்டை ஓடுகள்

செய்திப்பிரிவு

இலங்கை மன்னார் மாவட்டத்தில் தண்ணீர் குழாய் புதைக்க மண்ணை தோண்டியபோது ஏராளமான மனித மண்டை ஓடுகளும் எலும்புக் கூடுகளும் ஒரே இடத்தில் சிக்கின. இது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்த தகவலை காவல்துறை செய்தித்தொடர்பாளர் அஜித் ரோஹணா தெரிவித்தார்.

மன்னாரில் சாலையோரத்தில் தண்ணீர் குழாய் புதைப்பதற்காக குடிநீர் வடிகால் ஊழியர்கள் தோண்டியபோது மனித மண்டை ஓடுகளும் எலும்புகளும் சிக்கின, வெள்ளிக்கிழமை 6 மண்டை ஓடுகளும் ஞாயிற்றுக்கிழமை மேலும் நான்கு மண்டை ஓடுகளும் கிடைத்தன.

வடக்கு பகுதியில் 30 ஆண்டுகளாக நடந்த ஈழப்போரின் போது உயிரிழந்தவர்கள் மொத்தமாக ஆங்காங்கே புதைக்கப் பட்டுள்ள்ளனர். அத்தகைய புதைகள் ஆங்காங்கே இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்து வந்துள்ளன. மாத்தளை பகுதியில் ஒரே இடத்தில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் இருந்தது கடந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த எலும்புக் கூடுகள் 1987-90-ல் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட தமது ஆதரவாளர்கள் என ஜேவிபி கட்சி தெரிவித்தது.

SCROLL FOR NEXT