மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 57 எம்.பி.க் களில், 55 பேர் கோடீஸ்வரர்கள்; 13 பேருக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அண்மையில் நடந்துமுடிந்த தேர்தலில், பாஜக சார்பில் 17 பேர், காங்கிரஸ் சார்பில் 9 பேர், சமாஜ்வாடி சார்பில் 7, அதிமுக சார்பில் 4, பிஜு ஜனதா தளம் சார்பில் 3, திமுக, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் கட்சிகள் சார்பில் தலா 2, சிரோமணி அகாலிதளம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் தலா ஒருவர் மற்றும் சுயேச்சை என மொத்தம் 57 பேர் மாநிலங்களவை உறுப்பினர் களாக தேர்வு பெற்றனர்.
இவர்கள் தங்கள் வேட்புமனு வில் தெரிவித்த தகவல்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக் கான கூட்டமைப்பு ஆய்வு செய்தது. அதன்படி, 57 எம்.பி.க் களில், 55 பேர் கோடீஸ்வரர் கள் என்பது தெரியவந்துள்ளது. தேசியவாத காங்கிரஸின் பிரஃபுல் பட்டேல் ரூ.252 கோடி சொத்துடன், கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இவரைத் தொடர்ந்து, காங்கி ரஸின் கபில்சிபல் (ரூ.212 கோடி), பகுஜன் சமாஜ் கட்சியின் சதிஷ் சந்திரா (ரூ.193 கோடி) ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மிகக் குறைவாக ரூ.60 லட்சம் சொத்துடன் பாஜகவின் அனில் மாதவ் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 57 எம்.பி.க்களில் 13 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. பாஜகவைச் சேர்ந்த 3 எம்.பி.க் கள், சமாஜ்வாடியைச் சேர்ந்த 2, திமுக, காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவற்றின் தலா ஒரு எம்.பி மீது குற்ற வழக்குகள் நிலு வையில் உள்ளன. உ.பி.யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களே அதிகளவில் குற்றப்பின்னணி கொண்டவர் களாக உள்ளனர்.