இந்தியா

ஸ்ரீநகரில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீது தீவிரவாதிகள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார்.

சனத் நகர் மற்றும் ஹைதர்போரா இடையிலான புறவழிச்சாலையில் ராணுவ வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT