இந்தியா

மேற்குவங்க மருத்துவமனையில் தீ விபத்து: பீதியில் ஏற்பட்ட நெரிசலில் 2 பெண்கள் பலி

பிடிஐ

மேற்குவங்க மருத்துவமனையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதால் உருவான கூட்ட நெரிசலில் சிக்கி, 2 பெண்கள் பலியாகினர்.

இதுகுறித்து, மாநில சுகாதாரப் பணிகள் துறை இயக்குநர் பிஸ்வ ரஞ்சன் சத்பதி தெரிவித்ததாவது:

மேற்குவங்க மாநிலம், முர்ஷி தாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரதான பிரிவில் காலியாக இருந்த விஐபி அறையின் ஏசி உபகரணத்தில் மின் கசிவு காரணமாக, (நேற்று) பகல் 11.50 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.

அந்தப் பிரிவில் இருந்த நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருந்த உறவினர்கள் அனைவரும் பீதியடைந்து, கட்டிடத்தை விட்டு வெளியேற முயன்றனர். ஒரே நேரத்தில் எல்லோரும் வெளியேற முயற்சித்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 2 பெண் ஊழியர்கள் மூச்சுத் திணறி இறந்துவிட்டனர்.

சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீயும் அணைக்கப்பட்டு விட்டதால், நோயாளிகளிடையே பதற்றம் தணிந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT