கயிலை மானசரோவர் யாத்திரைக் கான மானியத்தை இரட்டிப்பாக உயர்த்தி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி உத்தரபிரதேசத்தில் இருந்து கயிலை மானசரோவருக்கு புனித யாத்திரை செல்லும் யாத்ரீகர்களுக்கு இனி மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். இதற்கு முன் ரூ.50,000 மானியம் வழங்கப்பட்டது. மேலும் டெல்லி அல்லது வேறெந்த மாநிலத்திலாவது யாத்ரீகர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக மானசரோவர் பவன் என்ற கட்டிடத்தை கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
கயிலை மானசரோவர் யாத்திரை செல்வதற்கு நபர் ஒருவருக்கு ரூ.2.5 லட்சம் வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதிகமான தொகை என்பதால் பெரும்பாலான யாத்ரீகர்களுக்கு கயிலை மானசரோவர் செல்வது எட்டாக்கனியாகவே உள்ளது.