மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விரைவில் வேட்புமனு தாக்கல் செய்வார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அதே சமயம் மாநிலங்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதை வெறுக்கவில்லை என மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் ஜன.5-ஆம் தேதி தெரிவித்தார்.
மாநிலங்களவைத் தேர்தல் தேதியினை தேர்தல் ஆணையம் நேற்று (திங்கள் கிழமை) அறிவித்தது. மகாராஷ்டிரம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களைக்கு 7 உறுப்பினர்கள் உள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் ஒய்.பி.திரிவேதி மற்றும் ஜனார்தன் வாக்மாரே ஆகியோரது பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து இந்த இடங்களில் போட்டியிட வேறு இருவர் அறிமுகப்படுவார்கள் என்றும் அதில் ஒருவர் நிச்சயம் சரத் பவாராக இருப்பார் எனவும் அக்கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விரைவில் வேட்புமனு தாக்கல் செய்வார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 28 என்பது குறிப்பிடத்தக்கது.