இந்தியா

குஜராத் கலவரம்: பொறுப்பிலிருந்து நரேந்திர மோடி தப்பிக்க முடியாது: மத்திய அமைச்சர் சரத் பவார் பேட்டி

செய்திப்பிரிவு

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்துக்கான தார்மிகப் பொறுப்பிலிருந்து பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி தப்பிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.

சிஎன்என் ஐபிஎன் தொலைக் காட்சிக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் மத்திய விவசாயத்துறை அமைச்சரான பவார் கூறியதாவது:

கலவர வழக்கிலிருந்து அகமதா பாத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று விடுவித்ததால் மட்டுமே கலவரத்துக் கான தார்மிகப் பொறுப்பிலிருந்து மோடி தப்பிவிட முடியாது.

இருப்பினும் வழக்கிலிருந்து மோடியை விடுவித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நான் மதிக்கிறேன். நீதிமன்றம் சொல்வதை நாம் மதித்தாக வேண்டும். நான் அந்த மாநிலத்தின் முதல் வராக இருப்பதாக வைத்துக் கொள் வோம். ஏதாவது இதைப்போல (கல வரம்) அங்கு ஏற்பட்டால் நான் எனது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது என்றார்.

குஜராத்தில் கலவரம் வெடித்ததற்கு மோடி தார்மிகப் பொறுப்பு ஏற்றாக வேண்டும் என கூறுகிறார்களா என்ற கேட்டதற்கு, நரேந்திர மோடி உள்பட எந்த முதல்வருக்கும் அதற்கான தார்மிகப் பொறுப்பு இருக்கிறது என்றார் பவார். வகுப்பு கலவர வழக்கிலிருந்து மோடியை நீதிமன்றம் விடுவித்துள்ள தால் அவரை இனி பொறுப்பாக்க முடியாது என ஏற்கெனவே அவர் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி கேட்ட போது நீதிமன்ற தீர்ப்பை மதித்தாக வேண்டி இருக்கிறது என்று பதில் சொன்னார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை

குஜராத் கலவரம் சம்பந்தப்பட்ட மோடியின் 2202ம் ஆண்டு விவகாரம் இனி முடிந்த போன ஒன்று என்று சில மாதங்களுக்கு முன் கூறியதன் மூலம் பாஜகவை நோக்கி தேசியவாத காங்கிரஸ் நெருங்கிச் செல்கிறதா என்று கேட்டதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் உறவு கிடையாது என்பதை ஒன்றுக்கு 100 தடவை சொல்லி இருக்கிறேன். பாஜகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை என்றார் பவார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது தேசியவாத காங்கிரஸ் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு போதிய தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்கப் போவதில்லை. 272 தொகுதிகள் என்கிற மந்திர எண் பாஜகவுக்கு எத்தகைய நிலையிலும் கிடைக்காது. எனவே மோடி பிரதமராவாரா மாட்டாரா என்ற கேள்வி எழவே வாய்ப்பில்லை.

தேர்தலில் போட்டியிடவில்லை

மக்களவைத் தேர்தலில் இனி நான் போட்டியிட மாட்டேன். எனது லட்சியங்கள் மாறிவிட்டன. மாநிலங்களவை உறுப்பினராக கட்சியை பலப்படுத்துவேன் என்றார் பவார்.

SCROLL FOR NEXT